அறிவகத்தைப் பற்றி

Arivakam Tamil Cultural Academy

அறிவகத்தின் இலக்குகள் 

 • நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட, தரமான, தமிழ்மொழிக் கற்கைநெறியின் கீழ் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்துச் சிறப்பான கற்பித்தலின் ஊடாக, மொழி ஆற்றலை மேம்படுத்துதல்.

 • தொன்மையான எம் இனத்தின் மரபுவழிப்பட்ட அடையாளங்களை கற்பித்தலின் ஊடாகவும், பிற செயற்பாடுகள் வாயிலாகவும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லுதல்.

 • பல்லினப் பண்பாட்டுச் சூழலில், தமிழினம், தமிழ்மொழி பற்றிய உயர்வான உணர்வுடன் செயலாற்றும் வகையில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதல்.

கல்விசார் செயற்பாடுகள் 

 • மாணவர் தரம் அறிந்து கற்பித்தல்.

 • தரத்திற்கேற்ற நூல்களை உருவாக்கி, முறையாகக் கற்பித்தல்.

 • கற்பித்தலுக்குத் தேவையான எல்லா வளங்களையும் வழங்கல்.

 • மாணவரின் கற்கும் ஆற்றலுக்கு ஏற்ப, கற்றலை இலகுவாக்க உதவும் கற்பித்தல்.

 • கற்றலுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப, இலத்திரனியற் கருவிகளைப் பயன்படுத்துதல்.

 • ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முறையாகப் பின்பற்றுதல்.

 • மாணவர் முன்னேற்றத்தைக் கண்டறியும் மதிப்பீடுகளை தொடர்ச்சியாக செய்தல்.

 • தமிழ் கற்பித்தலில் கற்றற் குறிப்பேட்டின் (Agenda) பயன்பாட்டைக் கொண்டுவருதல்.

திறன்சார் செயற்பாடுகள் 

 • மாணவர் தனித்திறமைகளை இனம் கண்டு ஊக்குவித்தல்.

 • வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்தல்.

 • மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்குவித்தல்.

 

திறன்சார் வகுப்புகள் 

 • பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, கதை,  நாடகம் போன்ற துறைகளில் காட்டும் ஆர்வத்தை வளர்க்க உதவுதல்.

 • தலைமைத்துவ பண்பை வளர்த்தல்.

 • சமூகம் சார்ந்த உணர்வோடு செயற்படத் தூண்டுதல்.

 • தமிழர் வரலாறு, தமிழர் தொன்மை, தமிழர் பெருமை என்பவற்றை மாணவர் அறியச்செய்தல்.

 • தமிழரது அடையாளங்களைப் புலம்பெயர் மண்ணிற் பேணிக் காப்பவராக மாணவரை உருவாக்குதல்.

தேர்வுகள் 

 • எழுத்துத்தேர்வு: பாடப்பரப்பை உள்ளடக்கியது

 • வாய்மொழித்தேர்வு: மாணவரின் கேட்டல்,  பேசுதல், உள்வாங்குதல் போன்ற திறன்களை வெளிப்படுத்தும் தேர்வு

 • திறன்சார் போட்டிகள்

பட்டமளிப்பு 

ஆண்டு 3, 6, 8 தமிழ்மொழித் திறன் தேர்வில் சித்தியெய்தும் மாணவருக்குப் பட்டமளித்துச் சிறப்பித்தல்.

ஆசிரியர் பயிற்சி நெறி:

 • பாடநூல்களைக் கனடிய கற்பித்தல் முறையிற் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.

 • கற்பித்தலின்போது பயன்படத்தக்க கற்பித்தல் உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்தல்.

 • பெற்றோருடனான சந்திப்புக்களை ஏற்படுத்தி ஆசிரியரிடை பேணுதல்.

 • தமிழ் கற்பிக்கும் ஆசிரியரை சமூகப்பெறுமானம் மிக்கவராக அடையாளப்படுத்துதல்.

உங்கள் பிள்ளைகள் தமிழ் வகுப்புகளில் இணைந்து கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Contact Us

Loading...