ஆசிரியர்களுக்கு

Teacher info

ஆசிரியர்களுக்கு

 இணைவதால் ஏற்படும் நன்மைகள் 

 1. அனைத்துத் தமிழ்ப்பாடசாலைகளும் சுயமாக ஆனால் அறிவகத்தின் முழுமையான அங்கமாக இயங்கமுடியும்.

 2. உங்கள் பாடசாலைகளின் சிறப்பான வளர்ச்சியில் அறிவகத்தின் முழு ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

 3. சர்வதேச அளவிலான கற்பித்தல் தொடர்பான உதவிகளைப் பெற்றுக்கொள்ள வழிகிடைக்கும்.

 4. மிகப்பெரியதொரு தளத்தில் உங்கள் கல்லூரி, கல்லூரியில் கற்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரச் சந்தர்ப்பம் ஏற்படும்.

 5. சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும்.

 6. சர்வதேச அளவிலான தமிழ் அறிஞர்களின் பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்று கற்பித்தல் முறையையும் கற்பித்தல் தேவைகளையும் அறிந்து கொள்வதற்கான வசதிகள் உருவாகும்.

 7. புலம்பெயர் நாடுகள் அனைத்திற்குமான ஒரே சிறந்த பாடத்திட்டத்தை உள்வாங்கிக் கற்பித்தல்.

 8. புலம்பெயர் நாடுகள் அனைத்திற்குமான ஒருமுகப்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறியில் பங்கேற்று மாணவர்களின் தகுதி நிலையை புலம்பெயர் நாட்டளவில் ஒப்பிட்டு வளர்த்தல்.

 9. தனித்தனியே உள்ள தமிழ் ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களை ஒன்று திரட்டிப் பலமான ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்க அத்திவாரமிடல்

 10. ஒருமுகப்படுத்தப்பட்ட கல்லூரிகளின் விளம்பரங்கள் மற்றும் மாதாந்தச் செய்தி இதழ்கள் மூலம் அனைத்துக் கல்லூரிகளையும் வெளிக்கொண்டுவருதல்.

 11. அறிஞர்கள் ஒருமுகப்படுத்தப்டுவதால் ஆய்வுகள் மேற்கொள்வது இலகுவாக்கப்படும்.

Teach, and make a difference Today!

Loading...